CM Vijay 3

CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் – கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?

119 0

CM Vijay: காவிரி நீர் மற்றும் மேகதாது திட்டம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளாராம்.

CM Vijay: காவிரி நீர் மற்றும் மேகதாது திட்டம் தொடர்பான பிரச்னைகளை சுமூகமாக முடிவுக்கு கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளாராம்.

கர்நாடக முதலமைச்சரை சந்திக்கும்  CM விஜய்?

தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கொடுக்காமல் இழுத்தடித்து வரும் கர்நாடக அரசு, மேகதாது அணை கட்டும் தொடர்பான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணைத் திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சந்திப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த பிரச்னையை சுமூகமாக முடிக்க முதலமைச்சர் விஜய் பெங்களூருவிற்கே சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் எனவும் கூறப்படுகிறது.

காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகா

தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்பது விதி. ஆனால்  ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீருக்கு பதில் 2.91 டிஎம்சி நீரை மட்டுமே கர்நாடகா வழங்கியுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீரும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடாத சூழல் நிலவுகிறது.  இதையடுத்து கடந்த 22ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், கர்நாடக அணைகளில் பெங்களூர் மாநகரின் குடிநீர் தேவைக்காக மட்டும் தான் தண்ணீர் இருப்பதாக கர்நாடக அரசு கூறியதை கருத்து அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.  இதனால் காவிரி பாசன மாவட்டங்களில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க காவிரி மேலாண்மை ஆணையம் நிராகரித்துள்ளது.

முதலமைச்சர் ஆலோசனைக் கூட்டம்:

கர்நாடக அரசு தொடர்ந்து இதே நடவடிக்கையை பின்பற்றினால் பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்.  குறுவையை தொடர்ந்து சம்பா நெல் சாகுபடியிலும் சிக்கல் ஏற்படக்கூடும்.
இதையடுத்து மாநிலத்துக்கு உரிய நீர் பெறுவதற்கான, சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அண்மையில் முதலமைச்சர் விஜய் தலைமையில், தலைமைச் செயலகத்தில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார், தலைமைச் செயலர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் தான், கர்நாடக முதலமைச்சர் சிவக்குமாரை தானே நேரில் சந்தித்து பேச முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஏதேனும் சுமூக முடிவு எட்டப்பட்டால் காவிரி நீரை நம்பியுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெருமகிழ்ச்சி கொள்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. முன்னதாக, தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு தமிழகத்திற்கான காவிரி நீரை பெற வேண்டும் என முன்னாள் முதலமைச்சர்களான ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

சனியின் ராசிக்கு இடம்பெயரும் சூரியன்… பண மழையில் நனைய போகும் ராசிகள்!

Posted by - டிசம்பர் 5, 2024 0
மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய…

தமிழ்நாட்டின் முக்கிய கோயில்களில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் – புகைப்படங்கள்

Posted by - ஜனவரி 6, 2023 0
தமிழ்நாட்டில் திருக்கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் வைபவங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. அண்ணாமலையார் திருக்கோயில்: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்…

ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் வந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம் – எடப்பாடி பழனிசாமி

Posted by - ஏப்ரல் 21, 2023 0
ஒரு சிலரை தவிர மற்றவர்கள் வந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி  பழனிசாமி தெரிவித்தார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.…

காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி

Posted by - ஜூன் 30, 2025 0
சிவகங்கையில், அஜித்குமார் என்ற காவலாளி, காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்த விவகாரம் தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சருக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். சிவகங்கையில், காவல்துறை…

நிம்மதியே இல்ல… ‘அடுத்தவர்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது’… ஜி.பி.முத்து வீடியோ வைரல்

Posted by - டிசம்பர் 14, 2023 0
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பேச்சிமுத்து. இவர் டிக்டாக் செயலி மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து ஜி.பி. முத்துவாக பிரபலமானார். நெல்லை வட்டார வழக்கில் பேசுவதால்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன