ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடுவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து..!!

306 0

ஆந்திராவில் வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு என்னும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ,சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடைபெற்றன . ஆந்திராவை பொருத்தவரை ஆரம்பம் முதல் தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது .

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டப்பேரவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

அந்தவகையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி 120 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது பாஜக 6 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த தேர்தலை விட 100 இடங்களுக்கு மேல் இந்த முறை இழந்துள்ள நிலையில் .இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது.

இதையடுத்து ஜூன் 9 தேதி சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக மீண்டும் அரியணையில் அமர உள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

உங்கள் தொலைநோக்கு தலைமையின்கீழ் ஆந்திர மக்கள் பெரும் முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன் என விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Post

Esakki Subaya

Esakki Subaya: தவெகவுடன் மனக்கசப்பா?.. MLA பதவியை மீண்டும் கேட்கும் இசக்கி சுப்பையா.. காரணம் இதுதான்!

Posted by - செப்டம்பர் 2, 2026 0
என்னைப் பொறுத்தவரை என் ராஜினாமாவை உடனடியாக ஏற்க வேண்டும், அம்பை தொகுதிக்கு இடைத்தேர்தல் வர வேண்டும் என தவெக நிர்வாகி இசக்கி சுப்பையா கூறியுள்ளார். ராஜினாமா செய்த…
%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF %E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF %E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%A4%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95

CM Vijay: மதுராந்தகம் மக்கள் மத்தியில் இன்று விஜய்! என்ன பேசப்போகிறார்? எதிர்பார்ப்பில் வாக்காளர்கள்?

Posted by - செப்டம்பர் 25, 2026 0
முதலமைச்சர் விஜய் இன்று மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட உள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம்…

அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?

Posted by - ஏப்ரல் 15, 2025 0
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த ஒருவரை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் அந்த கூட்டணி. அந்த அவர் சிக்குவாரா.? அதிமுக கணக்கு…
annamalai new party

பதிவுக்கு காத்திருக்கும் அண்ணாமலையின் புதிய கட்சி!

Posted by - ஜூன் 4, 2026 0
தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்​ணா​மலை தனிக்​கட்சி அறி​விப்பை வெளி​யிடப் போகிறார் என்​பது பரபரப்​புச் செய்​தி​யாக இருக்​கும் நிலை​யில், “அவர் தனிக்​கட்சி முடி​வில் தான்…

“இது வெறும் தேர்தல் களமல்ல… அறப் போர்க்களம்!” — முதல்வர் ஸ்டாலின்

Posted by - மார்ச் 21, 2024 0
சென்னை: “இதுவரை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்கள் அனைத்தும் யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான தேர்தல்களாக இருந்தன. இந்த முறை யார் ஆட்சிக்கு வரவே கூடாது என்பதற்கான…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன