கொலை மிரட்டல் விடுக்கும் என்ஜினீயர்.. பாபி சிம்ஹா பரபரப்பு பேட்டி

257 0

கொடைக்கானல்-பழனி சாலையில் பெருமாள்மலை அடுத்த வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையில் நடிகர் பாபிசிம்ஹா தனது பெற்றோர் பெயரில் வீடு கட்டி வருகிறார். இதற்காக கொடைக்கானலை சேர்ந்த ஜமீர் என்ற காண்ட்ராக்டருடன் ஒப்பந்தம் செய்தார்.

ஜமீரின் உறவினரான காதர் இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பரிந்துரை செய்துள்ளார். பாபிசிம்ஹாவும், காதரும் நண்பர்கள் என்பதால் அதனடிப்படையில் வீடு கட்டி கொடுக்க இருவரும் சம்மதித்தனர். கட்டுமான பணிகள் செய்வதற்காக பாபிசிம்ஹாவிடம் ஜமீர் ரூ.1. கோடியே 70 லட்சம் பெற்றுக்கொண்டு வீட்டை கட்டி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.கொடைக்கானல் பங்களாவுக்கு அனுமதியின்றி ஜேசிபி, வெடிமருந்து.. பாபி சிம்ஹா  மீது நண்பர் விதிமீறல் புகார் | Bobby Simha's friend accuses that the actor  built kodaikanal ...

பணிகள் பாதியில் நிற்கவே இதுகுறித்து ஜமீரிடம் கேட்டபோது கூடுதலாக பணம் கொடுத்தால்தான் வீட்டை கட்டி முடிக்கமுடியும் என தெரிவித்துள்ளார். மேலும் கட்டுமான பணிகளை பாதியில் நிறுத்தி சென்றதால் பாபிசிம்ஹா அதிர்ச்சிஅடைந்தார். இதையடுத்து ஜமீர், உசேன், பேத்துப்பாறையை சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் மீது பாபிசிம்ஹா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே பாபிசிம்ஹா மற்றும் கே.ஜி.எப். பட வில்லன், நடிகர் ஆகியோர் ஜமீரை மிரட்டியதாக கொடைக்கானலில் மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாபிசிம்ஹா கொடைக்கானலில் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது, ஜமீரின் மைத்துனரான காதர் எனது நண்பர். அவர் சொன்னதால்தான் ஜமீருக்கு வீடுகட்ட ஒப்பந்தம் செய்து கொடுத்தேன். ரூ.1.70 கோடி பணம் வாங்கி கொண்டு தரமற்ற கட்டிடப்பணிகளை செய்துள்ளனர்.

பொருட்கள் வாங்கியதற்கான ரசீதுகள் என்னிடம் கொடுக்கவில்லை. முறைகேடு செய்தது குறித்து கேட்டபோது உள்ளூர் மக்களை திரட்டி எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். ஒரு நடிகரான எனக்கே இதுபோன்ற மிரட்டல்கள் வருகிறது என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பு எவ்வாறு இருக்கும். என சந்தேகம் எழுந்துள்ளது.

பலமற்ற தரைத்தளம்,செட் அமைத்தது போல கட்டிட பணிகளை மோசமான நிலையில் கட்டி கொடுத்துள்ளனர். இதனை நான் புகாராக தெரிவித்தால் எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளது. எனவே இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குதொடர உள்ளேன். அங்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். 30 வருடமாக வசித்து வரும் தன்னை கொடைக்கானலை சேர்ந்த சிலர் சமூகஆர்வலர் என்ற பெயரில் கூறிக்கொண்டு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Post

”வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் வேணும்” – உதயநிதியை சந்திக்க வந்த விஜய் பட தயாரிப்பாளர்!

Posted by - டிசம்பர் 16, 2022 0
Varsiu: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார். வாரிசு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என்பதை வலியுறுத்தி உதயநிதி…

Goat படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.. காட்சியை பார்த்து அசந்துபோன பிரேமலதா

Posted by - மே 14, 2024 0
Goat திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Goat. இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கி வரும்…

சிறுசு முதல் பெருசு வரை..”ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!

Posted by - டிசம்பர் 13, 2025 0
ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகியுள்ள படையப்பா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த்.  ரஜினிகாந்த் திரைவாழ்வில் தவிர்க்க…

எவ்ளோ சிகரெட் பாக்கெட் அடித்தேன் என்று கணக்கே இல்லை..ரஜினிகாந்த் பேச்சு

Posted by - ஜனவரி 27, 2023 0
இந்திய சினிமாவின் முக்கிய பிரபலமாக திகழ்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.  #rajinikanth #thalaivar #superstar #rajini #thalapathy #superstarrajinikanth…

2022: எக்கச்சக்க எதிர்பார்ப்பு.. ஆனாலும் ஏமாற்றம்.. 2022ல் புஷ்வானமாகிய படங்களின் லிஸ்ட்!

Posted by - டிசம்பர் 26, 2022 0
2022 ஆம் ஆண்டு ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி ஏமாற்றத்தைக் கொடுத்த படங்களின் பட்டியலை  காணலாம். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் படம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன