தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி?

308 0

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாதம் மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக தேர்தல்.. பாஜக திவிரம்..

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததில் இருந்தே, தமிழ்நாடு தேர்தலில் பாஜக தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டு வர முனைப்பு காட்டி தீவிர பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. வலுவான திமுக கூட்டணிக்கு நிகராகவும், அதற்கு சவால் கொடுக்கும் விதமாகவும் தங்களது கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்பதில் டெல்லி பாஜக தலைமை உறுதியாக உள்ளதாம். இதற்காகவே ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகியோருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் தான், பிரதமர் மோடி வரும் ஜனவரி மாதம் பிரதமர் மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பிரதமர் மோடி தமிழகம் வருகை:

இந்நிலையில் வரும் ஜனவரி இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி 13-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. இந்த பயணத்தின் போது, தமிழக விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் தமிழகத்தில் விவசாயிகளுடன் இணைந்து முதல்முறையாக பிரதமர் மோடி கொண்டாடும் பொங்கல் விழாவாக இது இருக்கும். இதுபோக பொங்கல் விழாவை ஒட்டி நடைபெறும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கக் கூடும் என கூறப்படுகிறது. டெல்டா சார்ந்த மற்றும் கொங்கு மாவட்டங்களிலும் பிரதமர் பயணம் மேற்கொள்ளக்க்கூடுமாம். கூடுதலாக கூட்டணி கட்சிகளை மேடையேற்றி பிரதமர் மோடி தலைமையில், பொதுக்கூட்டத்தை நடத்தவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். பிரதமரின் இந்த பயணம், கிராமப்புற மக்கள் மற்றும் தமிழகத்தின் கலாச்சார ரீதியான ஒருங்கிணைப்பை இலக்காகக் கொண்ட ஒரு முக்கிய மக்கள் சந்திப்பு முயற்சியாக இருக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பாஜக தீவிரம்:

பிரதமர் மோடி வருகையின்போது தேசிய ஜனநாயக கூட்டணி, முழு வடிவம் பெற்றிருக்க வேண்டும் என தமிழக பாஜகவிற்கு தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். பாமக, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் கூட்டணியில் ஒருங்கிணைக்க விரும்புகிறதாம். இதன் காரணமாகவே அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் அடுத்தடுத்து டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனராம். மோடி வருகையின்போது கூட்டணி இறுதி செய்யப்படுவதோடு, தொகுதிப் பங்கீட்டையும் கிட்டத்தட்ட உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். இதனால் பிரதமர் மோடியின் வருகை, தமிழக சட்டமன்ற தேர்தலில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது.

Related Post

Gemini Generated Image po1o0gpo1o0gpo1o

TVK Vijay காவலர்களுக்கு ஜாக்பாட்… கொங்கு மண்டலத்தில் விஜய் கொடுத்த அதிரடி ‘ப்ராமிஸ்’!

Posted by - ஏப்ரல் 15, 2026 0
அடிப்படை காவலர்களுக்கான பணி ஊதியம் ரூ.18,200ல் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்தார். நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று திருப்பூரில்…
sss 2

சும்மா இருங்கயா..! ஷூட்டிங்லாம் இல்லையாம், விஜய் மும்பை போக காரணம் இதுதான் – வதந்தி வாய்கள்

Posted by - மார்ச் 21, 2026 0
தவெக தலைவர் விஜய் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிஷுட்டிங்கிற்காக மும்பை சென்றதாக வெளியான தகவலில் உண்மையில்லை என கூறப்படுகிறது. TVK Vijay: இயக்குனர் அட்லி வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

’விஜய் பேசிய இடத்தில் கூட்டத்தை போட்ட திமுக’ ஒரே நாளில் திரண்ட 25 ஆயிரம் பேர் – திருவாரூர்ன்னா சும்மாவா?

Posted by - செப்டம்பர் 22, 2025 0
‘விஜய் பிரச்சாரம் செய்த திருவாரூர் தெற்கு வீதியில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேரை கூட்டி அடுத்த நாளே கூட்டத்தை போட்டு மாஸ் காட்டியிருக்கிறது திமுக’ தமிழக…

விஜய் பிரசாரம்; தவெக-விற்கு செல்லுமிடமெல்லாம் சிக்கல் தான்; கரூரில் கருணை காட்டாத காவல்துறை

Posted by - செப்டம்பர் 26, 2025 0
தவெக-விற்கு செல்லும் இடமெல்லாம் சிக்கல் தான் என்று சொல்லும் அளவிற்கு, விஜய்யின் கரூர் பிரசாரத்திலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லாம் அனுமதி பிரச்னை தான். என்னவென்று பார்க்கலாம். 2026…
dfgdsf

MK Stalin on Budget: ‘’Blast Blast’-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste’ ஆக இருக்கு.!“ – விளாசிய மு.க. ஸ்டாலின்

Posted by - ஆகஸ்ட் 5, 2026 0
இன்று தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்கள் இந்த பட்ஜெட் பிளாஸ்ட்-ஆக இருக்கும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் வேஸ்ட்-ஆக இருப்பதாகவும் முன்னாள் முதலமைச்சர் மு.க.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன