Tamil Breaking News Collage Banner

CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?தவெக கூட்டணிக்குள் பாமக-வை கொண்டு வர முயற்சி நடந்து வரும் நிலையில், விசிக-வை சமாதானப்படுத்த முயற்சி நடந்து வருகிறது.

96 0

தவெக கூட்டணிக்குள் பாமக-வை கொண்டு வர முயற்சி நடந்து வரும் நிலையில், விசிக-வை சமாதானப்படுத்த முயற்சி நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் காரணமாக 109 தொகுதிகள் தவெக வசம் உள்ளது. தற்போது வரை தனிப்பெரும்பான்மை இல்லாமல் தடுமாறி வரும் தவெக அரசுக்கு காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது.

இடைத்தேர்தலில் பாமக மறைமுக ஆதரவு:

இந்த நிலையில், தவெக இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற மறைமுகமாக பாமக தனது ஆதரவை அளித்தது. விஜய் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாமல் தவித்து வந்த நிலையில், அவர் 4 எம்எல்ஏ-க்களை தனது வசம் கொண்டுள்ள பாமக-வின் ஆதரவை எதிர்பார்ப்பார் என்று கருதப்பட்டது. ஆனால், அவர் திமுக கூட்டணி வசம் இருந்த கட்சிகள் பக்கமே சென்றார்.

தவெக ஆட்சியமைக்க உறுதுணையாக இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக அவ்வப்போது விஜய்க்கு பெரும் குடைச்சலை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த போதிலும் பாமக அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவை அளிக்கவில்லை. இது தவெக-விற்கான மறைமுக ஆதரவாக அமைந்தது. இதன் காரணமாகவும் மரகதம் குமரவேல் அபார வெற்றி பெற்றார்.

பாமக – விசிக ஒரே கூட்டணியிலா?

தவெக தலைமையிலான கூட்டணியில் பாமக-வையும் கொண்டு வர தவெக மூத்த தலைவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இதற்கு விசிக உடன்பட மறுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் வட தமிழகத்தில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதல்கள் உள்ளிட்ட கசப்பான சம்பவத்தால் இரு தரப்பினரும் ஒரே அணியில் இணைவது மிகவும் சவாலானதாக உள்ளது.

குறிப்பாக, பாமக கூட்டணிக்குள் வந்தால் விசிக வெளியேறும் என்று திருமாவளவனும், அமைச்சர் வன்னி அரசும் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். வட தமிழகத்தில் வாக்கு வங்கியை அதிகரிக்கவும், பெரும்பான்மை சிக்கல் இல்லாமல் எஞ்சிய நாட்கள் ஆட்சியை நடத்தவும் பாமக-வை உள்ளே வர கொண்டு  அமைச்சர்கள் திருமாவளவனையும், விசிக-வையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

என்ன  முடிவு எடுப்பார் விஜய்?

அதேசமயம், சில அமைச்சர்கள் பாமக உள்ளே வருவதால் விசிக வெளியேறினாலும் பாமக ஆதரவை வைத்து சமாளிக்கலாம் என்று விஜய்யிடம் ஆலோசனை கூறி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தற்போது வரை முதலமைச்சர் விஜய் எந்தவொரு முடிவும் எடுக்காமல் உள்ளார். விரைவில் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் முடிவு எடுக்க உள்ளார் என்று கருதப்படுகிறது.

Related Post

வேதனை தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!!

Posted by - அக்டோபர் 29, 2024 0
விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த த.வெ.க.வினர் சாலை விபத்தில் சிக்கி…
PMK vs Congress

PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?

Posted by - ஆகஸ்ட் 3, 2026 0
தமிழ்நாட்டின் முக்கியமான கட்சிகளில் ஒன்று பாமக. இவர்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கும் இடையே நடந்து வந்த மோதல் முடிவுக்கு வந்து கட்சி முழுவதும் அன்புமணி கட்டுப்பாட்டின்…
admk

TVK – AIADMK: திமுகவுக்கு கட்டம் கட்ட முடிவு… தவெகவுடன் இணையும் அதிமுக.. மெகா ட்விஸ்ட்!

Posted by - மே 6, 2026 0
திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விஜய் மாறியுள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் நமக்கு குறைந்தபட்சம் வரும் காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது இருக்கும் என அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பலரும்…
Generated Image January 07 2026 5 00PM

வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சங்க நிர்வாகிகளை விடுவிக்க பழனிசாமி வலியுறுத்தல்

Posted by - ஜனவரி 13, 2026 0
‘வீட்டுச் சிறை​யில் வைக்​கப்​பட்​டுள்ள இடைநிலை ஆசிரியர் சங்க நிர்​வாகி​களை உடனடி​யாக விடு​தலை செய்ய வேண்​டும்’ என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வலி​யுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட…
Generated Image November 22 2025 10 25AM

விஜய் மக்கள் சந்திப்பு: காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அனுமதி மறுப்பு! பரபரப்பு அறிக்கை வெளியீடு!

Posted by - நவம்பர் 22, 2025 0
“காஞ்சிபுரம் அருகே நாளை விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது நாளை நடைபெறும் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன