fe

“திமுகவுடன் அதிமுக பேச்சு நடத்தவே இல்லை” – பழனிசாமி திட்டவட்டம்

114 0

சென்னை: “எங்களுடைய கூட்டணியை தவிர்த்து வேறு யாரிடமும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நூற்றுக்கு நூறு சதவீதம் திமுகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், தவெக அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என தீர்மானித்து இருந்தோம். சட்டப்பேரவை கட்சி தலைவர் தேர்வை முறையாக சபாநாயகருக்கு தெரிவித்தோம். கொறடா உத்தரவை மீறி சட்டத்துக்குப் புறம்பாக தவெக அரசுக்கு வாக்களித்துள்ளனர்.

ஜெயலலிதா புகழ் சொல்லிதான் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றோம். அதிமுகவுக்கு விசுவாசமாக இல்லாமல் துரோகம் விளைவிக்கிறார்கள் சில முன்னாள் அமைச்சர்கள்.

தேர்தலில் வெற்றி தோல்வி ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இது அதிமுகவுக்கு மட்டும் நடந்தது இல்லை. சில முன்னாள் அமைச்சர்கள் திட்டமிட்டு அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தவறாக வழிநடத்துகிறார்கள்.

தூய்மையான ஆட்சி நடத்துவேன் என்று சொல்லும் முதல்வர் விஜய், ஒரு கட்சியில் கருத்து வேறுபாடும் நிலவும்போது ஒரு தரப்பினரை சந்திப்பது எந்த விதத்தில் நியாயம்? இது தான் தூய்மையா?

எல்லா இயக்கங்களுக்கும் சோதனைவரும், பிரிவு வரும். ஆனால், எந்த தலைவரும் பிரிந்தவர்களின் இல்லங்களுக்கு சென்றது இல்லை. ஆரம்பத்திலேயே தவறான பாதைக்கு செல்கிறார் தவெக விஜய். இது போன்ற விஷயங்கள் வருத்தமளிக்கிறது.

அதனால் இதுபோன்ற காரணத்தை சொல்லி மக்கள், நிர்வாகிகளிடத்தில் ஒரு தவறான விஷயத்தை சொல்லி வருகிறார்கள். அதோடு தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற ஆசையில் இப்படி சொல்கிறார்கள்.

அதிமுக, எங்களுடைய கூட்டணியை தவிர்த்து வேறு யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. நூற்றுக்கு நூறு சதவீதம் திமுகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை” என்று பழனிசாமி தெரிவித்தார்.

Related Post

2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு.. தவெக அறிவிப்பு

Posted by - பிப்ரவரி 19, 2024 0
சென்னை பனையூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் கூட்டத்திற்கு பிறகு அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த பிப்ரவரி…
Tamil Political Rally Montage

Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!

Posted by - அக்டோபர் 15, 2026 0
தமிழக பாஜகவின் புதியத் தலைவராக நடிகர் சரத்குமார் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரித்துள்ளன. தற்போதைய மாநிலத் தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளில் பாஜக தேசிய…

தீர்ப்பு வழங்கியதற்காகவே மோசமாக விமர்சிக்கின்றனர்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

Posted by - அக்டோபர் 6, 2025 0
சென்னை: வழக்குகளில் தீர்ப்பு வழங்கியதற்காக நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பின்புலம் குறித்து சமூக வளைதளத்தில் மோசமாக விமர்சிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். யூடியூப்…
Generated Image January 08 2026 10 50AM

ஜனநாயகன் பிரச்னை – காங்கிரஸ் அட்டாக்

Posted by - ஜனவரி 8, 2026 0
ஆர்.எஸ்.எஸ்., படங்கள் மட்டும் கலாச்சார படங்கள் என போற்றப்படுவது ஏன்? என விஜயின் ஜனநாயகன் பட விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. தணிக்கை குழுவும் பாஜகவால் ஆயுதமாக…
Gemini Generated Image t4hwvit4hwvit4hw

500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

Posted by - மார்ச் 30, 2026 0
தங்கம், வெள்ளி, பணம், கார்கள்… தவெக தலைவர் விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? தவெக தலைவர் விஜயின் அசையும் சொத்து மதிப்பு ரூ.404 கோடி (404,58,57,196)…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன