%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D %E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF %E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D

தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பாதிப்பு ஜனவரி வரை இருக்கும்: காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்

173 0

சென்னை: தமிழகத்​தில் உண்​ணிக் காய்ச்​சல் பாதிப்பு வரும் ஜனவரி மாதம் வரை இருக்​கும், காய்ச்​சல் இருந்​தால் உடனே மருத்​து​வ​மனைக்கு செல்ல வேண்​டும் என்று பொது சுகா​தா​ரத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை அண்ணா பல்​கலைக்​கழக மாணவர் ஒரு​வர் டெங்கு காய்ச்​சலால் உயி​ரிழந்​த​தாக தகவல் வெளி​யான நிலை​யில், இதை மறுத்த சுகா​தா​ரத்​துறை ‘ஸ்க்​ரப் டைபஸ்’ என்ற உண்​ணிக் காய்ச்​சல் பாதிப்பு தான் உயி​ரிழப்​புக்கு காரணம் என்று தெரி​வித்​தது. இந்​நிலை​யில், பொது சுகா​தா​ரத்​துறை இயக்​குநர் சோமசுந்​தரம் உண்​ணிக் காய்ச்​சல் தொடர்​பான விழிப்​புணர்வு வீடியோ ஒன்றை சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.

அந்த வீடியோ​வில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: உண்​ணிக் காய்ச்​சல் என்​பது பாக்​டீரியா கிரு​மி​யால் வரும் காய்ச்​சல் ஆகும். ஆள் உயரத்​துக்கு வளரும் புல், புதர்​கள் மற்​றும் வயல்​வெளி​களில் வாழும் ஒரு வகை உண்ணி மற்​றும் பூச்சி கடிப்​ப​தன் மூலம் இந்த நோய் பரவு​கிறது. முன்பு காடு​கள் மற்​றும் வயல்​வெளி​களில் வேலை பார்ப்​பவர்​களுக்கு மட்​டுமே இந்த நோய் பரவி வந்​தது.

ஆனால், தற்​போது பரு​வநிலை மாற்​றம் மற்​றும் மக்​களின் இடப்​பெயர்வு காரண​மாக அனைத்து இடங்​களி​லும் பரவலாக நோய் காணப்​படு​கிறது. குறிப்​பாக, ஆகஸ்ட் முதல் ஜனவரி மாதம் வரை இந்த காய்ச்​சலின் பாதிப்பு அதி​க​மாக இருக்​கும். இந்த காய்ச்​சலை கண்டு பொது​மக்​கள் அச்​சப்பட தேவை​யில்​லை. மற்ற காய்ச்​சலை போன்று சாதா​ரண​மாக உடல்​வலி, பசி​யின்மை போன்ற அறிகுறிகள் இருக்​கும்.

காய்ச்​சல் அறிகுறி இருந்​தால் தாம​திக்​காமல் அரு​கில் உள்ள மருத்​து​வரை அணுக வேண்​டும்.இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

அதே வீடியோ​வில், மதுரை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை பொதுநல மருத்​து​வர் பி.​வி.​பால​முரு​கன் கூறுகை​யில், “வயல்​வெளி​கள், புல்​வெளி​களில் நடக்​கும் போது, பேன்ட், ஷூ, முழு கை சட்டை அணிய வேண்​டும். டெங்கு காய்ச்​சல் போல், அதிக காய்ச்​சல், தலை​வலி, உடல் சோர்​வு, வறட்டு இரு​மல் போன்​றவை இருக்​கும். குறிப்​பாக, 4 மணிக்கு காய்ச்​சல் இல்​லாமல் இருந்​தவருக்​கு, 4:15 மணி​யள​வில் அதி​கள​வில் காய்ச்​சல் பாதிப்பு இருக்​கும்.

உண்ணிக் காய்ச்சலை ஆரம்ப நிலை​யில் கண்​டறிந்​தால் குணப்​படுத்​தலாம். உரிய சிகிச்சை பெறா​விட்​டால், நுரை​யீரல் பாதிப்​பு, மூளை பாதிப்​பு, இதய பாதிப்பு ஏற்​படும். அவ்​வாறு வந்​தா​லும் சிகிச்சை அளிக்​கப்​படும். ஆனால், இணை நோ​யாளி​கள் தாமத​மாக வரும்​போது உயி​ரிழப்பு ஏற்​படும். இந்த நோய்க்​கான பரிசோதனை அனைத்து அரசு மருத்​து​வ​மனை​களி​லும் செய்​யப்​படு​கிறது” என்று தெரி​வித்​துள்​ளார்.

சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “அண்ணா பல்​கலைக்​கழக மாணவர் உயி​ரிழப்​புக்கு உண்​ணிக் காய்ச்​சல் எனப்​படும் ஸ்கரப் டைபஸ் பாதிப்பு தான் காரணம். டெங்கு போன்றே காய்ச்​சல், தலை​வலி, வாந்தி என இருக்​கும். பூச்சி கடிக்​கும் இடத்​தில் ஒரு தழும்பு போன்ற வடு இருக்​கும். 2025-ல் 5,142 ஸ்கரப் டைபஸ் பாதிப்​பு​கள் பதி​வாகி​யுள்​ளன. இந்த ஆண்​டில் இது​வரை 4,619 பேர் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்” என்​று தெரிவித்​தார்​.

Related Post

மலைக்கோட்டை மதில் சுவரில் நீர்கசிவு- தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

Posted by - ஜூலை 20, 2023 0
நாமக்கல்: நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. ஒரே கல்லால் ஆன இந்த மலையின் உச்சியில் 246 அடி உயரத்தில் கோட்டை மதில்சுவர் உள்ளது. இக்கோட்டையானது 16-ம்…

ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000.. மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

Posted by - மார்ச் 27, 2023 0
தமிழகத்தில் ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உதவித்தொகை திட்டத்தை…

வேங்கை வயல் சம்பவத்தில் பட்டியல் சமூக மக்களை திமுக ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - ஏப்ரல் 16, 2024 0
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யாமல் இருப்பதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
Generated Image November 04 2025 4 24PM

மாதம்பட்டி ரங்கராஜ் மறுமண வழக்கில் வந்த அதிரடி தீர்ப்பு… ஜாய் கிரிசில்டா போட்ட வைரல் பதிவு

Posted by - நவம்பர் 4, 2025 0
மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமா படங்களை தாண்டி சமையல் தொழில் மூலம் தான்…

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. ஆளுங்கட்சிக்கு அடி மேல் அடி! என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்?

Posted by - ஜூன் 30, 2025 0
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் சட்டம் ஒழுங்கு சம்பவங்களும், காவல்துறையில் நடக்கும் அவலங்களும் ஆளுங்கட்சியான திமுக-விற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன