tamilnaducorrubtion

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்-அப்பில் புகார் கொடுக்கலாம்: அரசு அறிவிப்பு

100 0

 

சென்னை: அரசு அலு​வல​கங்​களில் யாராவது லஞ்​சம் கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக புகார் அளிக்​கும் வித​மாக புதிய வாட்​ஸ்​-அப் எண்ணை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது.

தமிழகத்​தில் முதல்​வர் விஜய் தலை​மையி​லான தவெக அரசு பொறுப்​பேற்​ற​தில் இருந்து லஞ்​சம், ஊழலை ஒழிக்க பல்​வேறு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

அதன்​படி, அரசு அலு​வலர்​கள் யாராவது லஞ்​சம் கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக 94981 80936 என்ற வாட்​ஸ்​-அப் எண்​ணில் புகார் கொடுக்​கலாம் என்று அரசு தற்​போது அறி​வித்​துள்​ளது. ஊழலைத் தடுக்​கும் நடவடிக்​கைகளை மேலும் வலுப்​படுத்​தும் நோக்​கில் இந்த வசதி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது.

அறிவிப்பு பலகை

இதுகுறித்து அனைத்து துறை​களின் செயலர்​கள், இயக்​குநர்​கள், மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு தலை​மைச் செயலர் எம்​.​சாய்​கு​மார் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: மாநிலம் முழு​வதும் உள்ள அனைத்து அரசு அலு​வல​கங்​கள் மற்​றும் பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் லஞ்ச ஒழிப்பு விழிப்​புணர்வு அறி​விப்பு பலகைகளை கட்​டா​யம் காட்​சிப்​படுத்த வேண்​டும்.

அதில், ‘லஞ்​சம் வாங்​கு​வதும், கொடுப்​பதும் குற்​றம்’ என்ற வாசகம் தெளி​வாக​வும், மக்​கள் பார்க்​கும் வகை​யிலும் காட்​சிப்​படுத்​தப்பட வேண்​டும். இதுத​விர, தமிழிலும், ஆங்​கிலத்​தி​லும் புகார் அளிக்​கும் நடை​முறை​கள் இடம்​பெற்ற மாதிரி அறி​விப்பு பலகை​யும் அலு​வல​கங்​களில் வைக்​கப்பட வேண்​டும்.

அரசுத் துறை​களின் அதி​காரப்​பூர்வ இணை​யதளங்​களி​லும் வாட்​ஸ்​-அப் புகார் எண் மற்​றும் லஞ்ச ஒழிப்​புத் துறை​யின் (ஊழல் தடுப்​பு, கண்​காணிப்பு இயக்​குநரகம் – DVAC) இணை​யதள முகவரியை வெளி​யிட வேண்​டும்.

வாட்​ஸ்​-அப் மட்​டுமின்​றி, dvac@nic.in என்ற மின்​னஞ்​சல் முகவரி மூல​மாக​வும், 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்​கள் மூல​மாக​வும் பொது​மக்​கள் லஞ்​சம் தொடர்​பான புகார்​களை தெரிவிக்​கலாம்.

எழுத்​துப்​பூர்​வ​மான புகார்​களை ‘இயக்​குநர், லஞ்ச ஒழிப்​புத் துறை, 293, எம்​கேஎன் சாலை, ஆலந்​தூர், சென்​னை-16’ என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்​சல் மூல​மாகவோ அனுப்​பலாம். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Related Post

மீண்டும் ஜெயில்.. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!

Posted by - டிசம்பர் 15, 2023 0
திண்டுக்கல்: லஞ்சம் வாங்கி கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டிசம்பர் 28 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு…

ரூ.1 கோடி நஷ்டஈடு தரணும்.. அமைச்சர் மனோ தங்கராஜுக்கு நோட்டீஸ் அனுப்பிய அண்ணாமலை!

Posted by - டிசம்பர் 9, 2023 0
15 நாட்களில் மன்னிப்பு கேட்கவும், நஷ்ட ஈடு வழங்கவும் வலியுறுத்தியுள்ள அண்ணாமலை, தவறும் பட்சத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு…
food

தோசை சாப்பிட உங்களுக்கு பிடிக்குமா? தோசை சாப்பிட்டே உங்க எடையை ஈஸியா குறைக்கலாமாம் தெரியுமா?

Posted by - டிசம்பர் 2, 2023 0
எடையை அதிகரிப்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருக்கிறதோ எடையைக் குறைப்பது அவ்வளவு கடினமானதாக உள்ளது. அதிகரித்த எடையைக் குறைக்க பெரும்பாலான மக்கள் டயட்டை நம்பியிருக்கிறார்கள். எடையைக் குறைக்க…

பெட்ரோலுடன் கலந்த தண்ணீர்.. வாகனங்கள் பழுதானதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..

Posted by - ஆகஸ்ட் 27, 2024 0
நீண்ட காலமாகவே பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுகிறது, தரமான பெட்ரோல் வழங்கப்படுவதில்லை என்ற புகார் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனால் வாகனங்கள் எளிதில் பழுதாகி விடுவதாக தெரிவிக்கின்றனர்.…

விஜய் பாஜகவின் பி டீமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்

Posted by - பிப்ரவரி 14, 2024 0
அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்த பிறகு அவரை பாஜகவின் பி டீம் என சிலர் கூறி வருவதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன