kumbakonam

கும்பகோணத்தில் இருந்து நேபாளம் சென்ற பயணிகளின் நிலை என்ன? – டிராவல்ஸ் நிறுவனம் தகவல்

121 0

கும்பகோணம்: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்திரை புறப்பட்டனர். இவர்களை கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற நிறுவனம் அனுப்பி வைத்தது.

இந்தப் பயணிகள் இன்று திபெத் நாட்டின் காத்மாண்டு பகுதியில் 3 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இவர்களை நேபாளத்தை சேர்ந்த சாம்ராட் டூரிஸம் அண்ட் டிராவல்ஸ் என்ற சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் சென்று கொண்டிருந்த பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், பயணிகளின் நிலை குறித்து கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் உரிமையாளர் சாதிக் கூறும்போது, “கடந்த 23-ம் தேதி கும்பகோணத்தில் இருந்து கிளம்பியவர்கள் தற்போது திபெத் நாட்டில் சிக்கியுள்ளனர். இன்று (ஆக.26) காலை அவர்கள் சென்ற 2 வாகனங்களும் சிக்கின. காலை 10 மணிக்கு எனக்கு கிடைத்த தகவலின்படி, 20 பேர் பத்திரமாக இருக்கின்றனர்.

மீதமுள்ள 37 பேர் தங்களது உடமைகளை இழந்து ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து சிவரஞ்சனி என்பவர் எனக்கு இந்தத் தகவலை கொடுத்தார்.

எவ்வித தொலைத் தொடர்பு வசதியும் இல்லாத ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால் அவர்களை அடிக்கடி தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களாக நம்மை தொடர்பு கொண்டால் மட்டுமே பேசமுடியும்.

இந்தக் குழுவில் எனது மகன் உமர் பாரூக் (30), அவர்களுக்கு வழிகாட்டியாக சென்றிருக்கிறார். இவர் ஏற்கெனவே இரண்டு முறை நேபாளத்துக்குச் சென்று வந்திருக்கிறார். மற்றவர்களை போலவே எனக்கும், எனது மகன் குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இதுவரை நான் அனுப்பி வைத்த யாத்ரீகர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. எனவே, தற்போதும் அனைவரும் பத்திரமாக மீட்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

இந்நிலையில், நேபாளத்தில் இருந்து உரிய தகவல் கிடைக்காத 37 பேரை உடனடியாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post

ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

Posted by - ஏப்ரல் 19, 2023 0
வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

ரீல் ஜோடி இனிமேல் ரியல் ஜோடியா..

Posted by - ஜனவரி 29, 2024 0
சிம்பு 40 வயதாகும் சிம்பு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருடைய காதல் கதைகள் அனைவருக்கும் தெரிந்தது தான். நடிகை நயன்தாராவை காதலித்து வந்த சிம்புவிற்கு ஒரு…
TAMILNADU BJP

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி எதிரொலி: நயினாருக்கு எதிராக திரளும் அண்ணாமலை ஆதரவாளர்கள்

Posted by - மே 11, 2026 0
மதுரை: சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்வி காரண​மாக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் பதவி விலக அண்​ணா​மலை ஆதர​வாளர்​கள் குரல் எழுப்​பத் தொடங்கி உள்​ளனர். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக​வுடன்…

மாசி மகத்தன்று கும்பகோணம் ‘மகாமகம்’ குளத்தில் நீராடினால்… உண்மையில் நம் பாவங்கள் நீங்குமா?

Posted by - பிப்ரவரி 24, 2023 0
கும்பகோணம் மகாமகம் குளத்தின் சிறப்பு, மாசி மகத்தன்று இங்கு நீராடினால் பாவங்கள் தீரும் என சொல்கிறார்களே அது ஏன் என்பதை இங்கு காணலாம். புராணங்களில் பல விஷயங்கள்…

புதுச்சேரியில் மது விற்பனையை அதிகரிக்க போட்டி போட்டு சலுகைகள் அறிவிப்பு- 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம்

Posted by - ஜூலை 5, 2023 0
புதுச்சேரி: புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் மது நுகர்வோர்களாக உள்ளனர். புதுவையின் அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அரசின்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன