tactv

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி முடங்கும் அபாயம்: 12 லட்சம் சந்தாதாரர்கள் பாதிக்கப்படுவர் என கருத்து

129 0

தமிழகத்​தில் அரசு கேபிள் டிவி செட் டாப் பாக்​ஸ்​களை ரீசார்ஜ் செய்ய முடி​யாத​தால், ஆபரேட்​டர்​கள் அச்​சத்​தில் உள்​ளனர். இதனால் அரசு கேபிள் டிவி நிறு​வனம் முடங்​கும் அபா​யத்​தில் உள்​ளது.

தமிழகத்​தில் அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில் 12 லட்​சம் சந்​தா​தா​ரர்​கள் உள்​ளனர். அவர்​களுக்கு இலவச​மாக செட் டாப் பாக்​ஸ்​கள் வழங்​கப்​பட்​டு, மாதம் ரூ.200 கட்​ட​ணத்​தில் 200-க்​கும் மேற்​பட்ட சேனல்​கள் ஒளிபரப்​பப்​பட்டு வரு​கின்​றன. தனி​யார் கேபிள் நிறு​வனங்​கள் மாதம் ரூ.250-க்கு மேல் கட்​ட​ணம் வசூலிப்​ப​தால், மக்​கள் அரசு கேபிள் டிவியையே விரும்​பு​கின்​றனர்.

மேலும், அரசு கேபிள் டிவி நிறு​வனத்​துக்கு தேவை​யான செட் டாப் பாக்​ஸ்​கள் விநி​யோகம், சர்​வர் பராமரிப்பை தனி​யார் நிறு​வனம் மேற்​கொண்டு வரு​கிறது. கடந்த ஒரு வார​மாக புதி​தாக சேரும் சந்​தா​தா​ரர்​களுக்கு செட் டாப் பாக்​ஸ்​களை பொருத்தி ரீசார்ஜ் செய்ய முடிய​வில்​லை.

அதே​போல், சேவையை வேண்​டாம் என்று சொல்​வோருக்கு இணைப்பை துண்​டிக்​க​வும் முடிய​வில்​லை. இந்த பிரச்​சினை​யால் பழுதடைந்த பாக்​ஸ்​களை கூட மாற்ற முடிய​வில்​லை. இதேநிலை நீடித்​தால், அரசு கேபிள் டிவி முடங்​கும் அபா​யம் உள்​ளது. இதனால், மாநிலம் முழு​வதும் உள்ள பல ஆயிரக்​கணக்​கான அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் அச்​சத்​தில் உள்​ளனர்.

இதுகுறித்து அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் கூறிய​தாவது: மூன்று ஆண்​டு​களுக்கு முன்​பு, செட் டாப் பாக்​ஸ்​கள் விநி​யோகம், சர்​வர் பராமரிக்​கும் தனி​யார் நிறு​வனத்​துக்கு நிலு​வைத்​தொகை இருந்​த​தால், அந்​நிறு​வனம் ஒளிபரப்பு சேவையை முடக்​கியது. நீதிமன்ற உத்​தர​வையடுத்​து, மீண்​டும் சரிசெய்​யப்​பட்​டது.

அதன் பின்​னர், கடந்த சில ஆண்​டு​களாக சிக்​னல் பிரச்​சினை இல்​லாமல் அரசு கேபிள்டிவி ஒளிபரப்​பப்​பட்டு வரு​கிறது.

இதனால், அரசு கேபிள் டிவி சந்தா தாரர் எண்ணிக்கை அதிகரித்தது. தற்​போது, மீண்​டும் செட் டாப் பாக்​ஸ்​கள் விநி​யோகிக்​கும் தனி​யார் நிறு​வனத்​துக்கு அரசு கேபிள் டிவி நிறு​வனம் முறை​யாக பணம் செலுத்​த​வில்லை என்று கூறப்​படு​கிறது.

அந்த நிறு​வனம் சர்​வரை முடக்​கிய​தால், புதி​தாக செட் டாப் பாக்​ஸ்​களை பொருத்தி ரீசார்ஜ் செய்ய முடிய​வில்​லை. பழுதடைந்த பாக்​ஸ்​களை மாற்​றித் தரவும் முடிய​வில்​லை. அதே​போல், இணைப்பு வேண்​டாம் என்று சொல்​​வோருக்​கும் துண்​டிக்க முடிய​வில்​லை. துண்​டிக்க முடி​யா​விட்​டால், அதற்​குரிய பணத்தை நாங்​கள்​தான் செலுத்த வேண்​டும்.

இப்​பிரச்​சினை கடந்த ஒரு வார​மாக தொடர்​வ​தால், அரசு கேபிள் டிவி நிறு​வனத்தை மூடி​விடு​வார்​களோ என்ற அச்​சம் ஏற்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர். இதுகுறித்து அரசு கேபிள் டிவி நிறுவன அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ‘தனி​யார் நிறு​வனத்தை நம்​​பாமல், அரசு கேபிள் டிவி தொழில்​நுட்ப உதவி​யார்​கள்மூலமே செட் டாப் பாக்ஸ் பிரச்சினையை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வரு​கிறோம்’ என்​றனர்​.

Related Post

உங்களுக்கு ‘இந்த’ அறிகுறிகள் இருக்கா? அப்ப இரும்புசத்து குறைபாடு இருக்க வாய்ப்பிருக்கு… உடனே இத சாப்பிடுங்க!

Posted by - அக்டோபர் 25, 2023 0
நம் உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியம். ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களும், நம் உடலின் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் இரும்புசத்து நம் உடலுக்கு மிகவும் அவசியமான…

வங்காளதேசம் அருகே மிதிலி புயல் கரையைக் கடந்தது: வானிலை மையம் தகவல்

Posted by - நவம்பர் 18, 2023 0
சென்னை: வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது. கடந்த 14-ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

ஒரே நாடு ஒரே தேர்தல் – தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

Posted by - டிசம்பர் 13, 2024 0
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கருத்தை முதலமைச்சர் ஸ்டாலின் படிக்கவில்லையோ என்ற சந்தேகம் எழுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

8 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த கல்யாண ராணி- திடுக்கிடும் தகவல்கள்

Posted by - ஜூலை 11, 2023 0
ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின்…

சந்தி சிரிக்கும் சட்ட-ஒழுங்கு? கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பாரா ஸ்டாலின்? வெயிட்டிங்கில் எதிர்க்கட்சிகள்

Posted by - ஏப்ரல் 28, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட-ஒழுங்கு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்க பதில் அளிக்க உள்ளதால், சட்டசபையில் இன்று அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வசம் உள்ள காவல்துறை…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன