12 %E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9 %E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D

Rasi Palan : சிம்மத்துக்கு தடங்கல்.. மகரத்துக்கு சிக்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்ல நாளா?

140 0

Rasi Palan Tamil Today (21.09.2026): கஜலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படும் செப்டம்பர் 21ம் தேதியான இன்றைய நாளின் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம்.

செப்டம்பர் 21ம் தேதி திங்கட்கிழமையான இன்றைய நாளின் 12 ராசிகளுக்குமான பலன்களைக் காணலாம். வளர்பிறை தசமி திதியுடன் கூடிய இந்நாளில் கஜலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

இன்றைய ராசிபலன்கள் (செப்டம்பர் 21)

மேஷம்வியாபாரம் பணிகளில் லாபங்கள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் திருப்தியை ஏற்படுத்தும். மனதை குழப்பிய சிந்தனைகளில் இருந்து சுதந்திரமான சூழ்நிலைகள் ஏற்படும். உடற்பயிற்சி விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள்.

ரிஷபம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை அகலும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கணவன்-மனைவியிடையே நெருக்கம் உண்டாகும். சிறு சிறு மாற்றங்கள் மூலம் லாபகரமான வாய்ப்புகளை ஏற்படுத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மிதுனம்

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். மனை விற்பனையில் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

கடகம்

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் பலவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். கணவன்-மனைவியிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும்.

சிம்மம்

தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். நண்பர்கள் வழியே நல்ல செய்தி வரும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். எதிர்பாலின மக்களுடன் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்திருந்த ஆதாயம் உருவாகும். சேமிப்பு செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பேச்சுவார்த்தைகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும்.

துலாம்

பேச்சுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை உண்டாகும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கையும் துணிச்சலும் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முத்திரை பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். ஆன்மீக எண்ணங்களில் நிபுணத்துவம் வெளிப்படும்.

தனுசு

பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய செயல்களில் அலைச்சல் உண்டாகும். பேச்சுகளில் பொறுமை வேண்டும். உணவு துறைகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். கால்நடை சார்ந்த செயல்களில் ஆதாயம் ஏற்படும். வாகனத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள்.

மகரம்

வியாபார பயணங்களில் சாதகமான சூழல்கள் அமையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்ப்பது நல்லது. செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். துணைவரைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.

கும்பம்

மனதிற்கு பிடித்தவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் வந்து செல்லும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களின் பணியைச் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக நிறைவு பெறும். சகோதர வகையில் அனுசரித்து செல்லவும்.

மீனம்

தன வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

Related Post

கொலை… கொள்ளை… வழிப்பறி – என்னாச்சு சட்டம்-ஒழுங்கு?

Posted by - செப்டம்பர் 13, 2023 0
திருப்பூர், பல்லடத்துக்கு அருகேயுள்ள கள்ளக்கிணறு பகுதியில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட அன்றைய தினம் மட்டுமே தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்திருக்கின்றன. பட்டப்பகலில் கொலைசெய்கிறார்கள், வீட்டின்…

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Posted by - அக்டோபர் 7, 2024 0
வான் சாகச நிகழ்வை காண சென்ற 5 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசுதான் முழு பொறுப்பு என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

உடல், மனம் இரண்டும் சமநிலையை அடைய உதவும் பார்சுவ பகாசனம்

Posted by - மார்ச் 2, 2023 0
வடமொழியில் ‘பகா’ என்பது நாரையைக் குறிக்கும் சொல். ஆனால், பகாசனம் என்பது Crow Pose என்றும் Crane Pose என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால், இரண்டும் வெவ்வேறு ஆசனங்கள்.…

Udhaynidhi On Vijay: ”அந்த அறிவு கூடவா இல்லை” – சினிமாக்காரர் விஜய்க்கு பதிலடி தந்த உதயநிதி

Posted by - டிசம்பர் 7, 2024 0
Udhaynidhi On Vijay: விஜய் பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பான கேள்விக்கு, சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என உதயநிதி பதிலளித்துள்ளார். Udhaynidhi On Vijay: திமுக பற்றிய விஜயின் பேச்சு…

ஜோதிடம் பலிக்காததால் ஆத்திரம் : ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண்மணி உட்பட இருவர் கைது

Posted by - ஜனவரி 19, 2025 0
ஜோதிடர் ஜான் ஸ்டீபன் கொலை வழக்கில் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி மற்றும் நெல்லை கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன