SDFASDG

TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு

177 0

TNEB : மின் கட்டணம் அதிகம் என கூறப்பட்டுள்ள வீடுகள், அலுவலகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், தவறுகள் இருந்தால் திருத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்சாரமும் மக்களின் வாழ்க்கையும்

நவீன காலத்தில் மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் சமையல் முதல் ரயிலை இயக்குவது  வரை மின்சாரம் கட்டாய தேவையாக உள்ளது. முன்பெல்லாம் பல மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டாலும் எப்போ மின்சாரம் வரும் என மக்கள் காத்திருந்த நிலையில், தற்போது மின் வெட்டு ஏற்பட்ட அடுத்த நொடியே மின்சார அலுவலகத்திற்கு போன் மூலம் மின்சாரம் எப்போது வரும் கேட்கும் நிலையானது உருவாகியுள்ளது. அந்த அளவிற்கு மக்களின் வாழ்கையில் இணைந்துள்ளது மின்சாரம்.  இந்த நிலையில், தற்போது புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு 500 யூனிட்டிற்குள் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதிக மின் கட்டண புகார்

இதனால் மக்கள் உற்சாகத்தில் இருந்த நிலையில், எப்போதும் 400 ரூபாய் என்ற அளவில் வந்த மின் கட்டணம் கடந்த மாதம் 1200, 3000 என பல மடங்கு அதிகமாக வந்த்து. இது தொடர்பாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார வாரியத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அந்த வகையில் ஒரு சில இடங்களில் மின் கட்டணம் அதிகம் வந்ததை மின்சார வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் மின்சார கணக்கீடு குளறுபடி, பழைய மின் மீட்டர் ஆகியவைதான் காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அதிகளவு மின் கட்டணம் வந்ததாக புகாரையடுத்து சுமார் 3.70 லட்சம் மின் இணைப்புகளில் மறுஆய்வு TNPDCL உத்தரவிட்டுளது.

3.70 லட்சம் வீடுகளில் நேரில் ஆய்வு

அந்த வகையில், ஜூலை 2026 மாதத்தில் அதிக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக மாநிலம் முழுவதும் எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, அதிக மின் நுகர்வு பதிவான வீட்டு மின் இணைப்புகளில் மறுஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, TNPDCL தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வி. அருண் ராய் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்,  ஜூலை  மாதத்தில், மே மாத மின் நுகர்வுடன் ஒப்பிடும்போது அதிக அளவில் மின் பயன்பாடு பதிவான 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் மூத்த அதிகாரிகளால் நேரடியாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தவறுகள் இருந்தால் உரிய திருத்தம் செய்யுங்கள்

இந்த ஆய்வுப் பணியில் தலைமைப் பொறியாளர், மேற்பார்வைப் பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், கணக்கு அதிகாரிகள், மதிப்பீட்டு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிலை அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மின் கட்டணம் அதிகம் என கூறப்பட்டுள்ள வீடுகள், அலுவலகங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.  ஆய்வின்போது ஏதேனும் தவறுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக உரிய திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Related Post

kumbakonam

கும்பகோணத்தில் இருந்து நேபாளம் சென்ற பயணிகளின் நிலை என்ன? – டிராவல்ஸ் நிறுவனம் தகவல்

Posted by - ஆகஸ்ட் 26, 2026 0
கும்பகோணம்: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்திரை புறப்பட்டனர். இவர்களை கும்பகோணத்தை சேர்ந்த…

ஈரோடு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பாக 110 புகார்கள் வந்துள்ளன – தேர்தல் நடத்தும் அலுவலர் தகவல்

Posted by - பிப்ரவரி 16, 2023 0
தேர்தல் விதிமுறைகள் மீறியது தொடர்பாக இதுவரை 110 புகார்கள் வந்துள்ளதாக ஈரோடு தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி  சட்டமன்ற உறுப்பினராக இருந்த…
%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF

Tamil Nadu Assembly : ”அட்லி பற்றியும் பேசுவோம் சட்னி பற்றியும் பேசுவோம்” பேரவையில் சம்பவம் செய்த திமுக..!

Posted by - ஜூன் 19, 2026 0
இயக்குநர் அட்லி  சிறந்த திரைப்படக் காட்சிகளை எடுத்து வெட்டி ஒட்டி ஹிட் கொடுப்பார்,அதுபோல எங்கள் ஆட்சியின் திட்டங்களை எடுத்துக்கொண்டு தற்போது ஆட்சி நடத்தப்படுகிறது என்று தவெக அரசை திமுக…

தமிழகத்தில் இன்று மிக கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Posted by - நவம்பர் 22, 2023 0
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்து உள்ள நிலையில் இயல்பான அளவைவிட குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய…

வாயை மூடிக்கிட்டிரு… பெண்ணை அதட்டிய அமைச்சர் பொன்முடி

Posted by - மார்ச் 16, 2023 0
தொடர்ந்து அமைச்சர் பொன்முடி  மக்களிடையே சர்ச்சைக்குரிய வகையில் பேசி சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார் .   பேருந்தில் பெண்களுக்கு இலவச திட்டம் தமிழக அரசு கொண்டு வந்திருப்பதை,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன