தியேட்டரில் கூலி சேர் காலி… நாளுக்கு நாள் சரியும் வசூல் – 4 நாள் எவ்வளவு?

151 0

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு? என்பதை கீழே காணலாம்.

நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி ரிலீசானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருப்பதுடன் அமீர்கான், நாகர்ஜுனா, சத்யராஜ், செளபின் சாஹிர், உபேந்திரா என நட்சத்திர பட்டாளங்களே குவிந்திருந்ததால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியது.

ஞாயிற்றுக்கிழமை வசூல் எவ்வளவு?

படம் வெளியானது முதலே கலவையான விமர்சனங்கள் வெளியாகிய நிலையில், நாளுக்கு நாள் படத்தின் வசூல் சரிந்து வருகிறது. இந்தியாவில் முதல் நாள் ரூ.65 கோடியும், 2வது நாள் ரூ.54 கோடியும், 3வது நாள் ரூ. 39.5 கோடியும் வசூலித்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான 4வது நாள் வசூல் என்ன என்பதை காணலாம்.

தொடர் விடுமுறையின் கடைசி நாள் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கூலி படத்தின் வசூல் முதல் நாளுக்கு நிகராக இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், 4வது நாளான நேற்று எதிர்பார்த்ததை விட மிக குறைவாகவே அமைந்தது. அதாவது, இந்திய அளவில் ரூபாய் 35 கோடி மட்டுமே தமிழில் கூலி வசூலித்துள்ளது.

நான்கு நாள் வசூல் எவ்வளவு?

கடந்த நான்கு நாட்களில் மட்டும் கூலி படம் இந்தியாவில் ரூபாய் 194.25 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. நான்காவது நாளான நேற்று காலைக்காட்சிக்கு 45.47 சதவீதமும், மதிய காட்சிக்கு 69.97 சதவீதமும், மாலைக் காட்சிக்கு 76.73 சதவீதமும், இரவுக் காட்சிக்கு 62.81 சதவீதமும் இருக்கைகள் நிரம்பியிருந்தது. மதிய காட்சி மற்றும் மாலைக் காட்சிகள் எதிர்பார்த்ததை விட குறைவாகவே புக்கிங் இருந்தது. கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் இருப்பதும் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

சென்னையை காட்டிலும் திருச்சியில்தான் நேற்று ரசிகர்கள் கூட்டம் கூலி படத்திற்கு அதிகளவு இருந்தது. அதாவது, திருச்சியில் 86 சதவீதம் இருக்கைககள் நிரம்பியிருந்தது. சென்னையில் 85 சதவீதம் காட்சிகள் நிரம்பியிருந்தது. மதுரையில் 65.75 சதவீதமும், பாண்டிச்சேரியில் 78 சதவீதமும், சேலத்தில் 58 சதவீதமும், கோயம்புத்தூரில்  80.50 சதவீதமும், வேலூரில் 62.50 சதவீதமும், திண்டுக்கல்லில் 82.50 சதவீதமும் காட்சிகள் நிரம்பியிருந்தது.

இந்தியில் எப்படி?

பெங்களூரில் 48 சதவீதமும், திருவனந்தபுரம் 27 சதவீதமும், மும்பை 39.50 சதவீதமும், டெல்லியில் 24 சதவீதமும் காட்சிகள் நிரம்பியிருந்தது. கூலி இந்தியில் ஓரளவு நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இந்தியில் நேற்று மும்பை, டெல்லி, புனே, பெங்களூர், லக்னோ ஆகிய நகரங்களில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியில் வெளியான கூலி படத்திற்கு பெங்களூர் 65.25 சதவீதமும், லக்னோவில் 50.75 சதவீதம் இருக்கைகள் நிரம்பியிருந்தது. எதிர்பார்த்ததை விட கூலி படம் நாளுக்கு நாள் வசூலில் சறுக்கி வருகிறது என்பது ரஜினி ரசிகர்களுக்கு வேதனையாகவே அமைந்துள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கூலி படத்தில் அதிகளவு வன்முறை மற்றும் ரத்தக்காட்சிகள் இருந்த காரணத்தினால் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கமான ரஜினி படத்திற்கு வரும் குடும்ப ரசிகர்கள் திரையரங்கில் இந்த படத்தை காணும் வாய்ப்பை இழந்துவிட்டனர். இதனாலும் ரசிகர்களின் கூட்டம் திரையரங்கில் குறைவாக காணப்படுகிறது.

Related Post

rajini

விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம்

Posted by - ஜூலை 15, 2026 0
ஜெயிலர் 2 தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார்…

பிப்ரவரியில் வெளியாகும் கவினின் ‘டாடா’திரைப்படம்

Posted by - ஜனவரி 25, 2023 0
கவின் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘டாடா’. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில்…

ஜெயிலர் ரிலீஸுக்கு முன் சிவகார்த்திகேயனுக்கு போன் கால் செய்த ரஜினிகாந்த்.. காரணம் இதுதானா

Posted by - ஆகஸ்ட் 9, 2023 0
ஜெயிலர் ஜெயிலர் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுக்கு போன்…

விஜய்யால் தவறான பாதைக்கு செல்லும் ரசிகர்கள்.. கண்டித்தவர்களை எதிர்த்து பேசி பதிவு

Posted by - ஜூன் 27, 2023 0
விஜய் விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருவதை நாம் அறிவோம். இப்படத்தில் இடம்பெறும் நான் ரெடி தான் வரவா பாடல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.…
Jailer 2 Cinema News Spotlight

திங்கட்கிழமை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இத்தனை கோடி வசூலித்ததா ஜெயிலர் 2… செம ரெக்கார்ட்

Posted by - அக்டோபர் 19, 2026 0
ஜெயிலர் 2 ஜெயிலர் 2 கடந்த சில வாரங்களாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகிவிட்டது. கடந்த அக்டோபர் 15ம் தேதி ரசிகர்களின் ஆட்டம்,…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன