ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட்

330 0

இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட் | semiya vegetable cutlet Semiya cutlet tea  time snack ragi semiya cutlet

தேவையான பொருட்கள்

ராகி சேமியா – 100 கிராம்,

உருளைக்கிழங்கு – 3,

கேரட் – 1,

வெங்காயம் – 1,

கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் – தேவைக்கு,

வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை – 4 டீஸ்பூன்,

சோம்பு – 1/4 டீஸ்பூன்,

எண்ணெய் – 50 கிராம்,

மைதா – 4 டேபிள்ஸ்பூன்,

கொத்தமல்லி – சிறிது.

செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து தண்ணீராகக் கரைத்துக் கொள்ளவும்.

ராகி சேமியாவை மிக்சியில் ரவை பதத்திற்குப் பொடித்துக் கொள்ளவும்.

மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய கேரட், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், சோம்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை மைதா கரைசலில் முக்கி, பொடித்த ராகி சேமியாயில் போட்டு பிரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இப்போது சூப்பரான ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட் ரெடி.

Related Post

என்னை பிக்பாஸ் 7 வீட்டிற்குள் மீண்டும் அனுப்பினால்-அதிரடியாக பதிவு போட்ட பிரதீப்

Posted by - நவம்பர் 10, 2023 0
பிக்பாஸ் 7 கடந்த அக்டோபர் 1ம் தேதி படு பிரம்மாண்டமாக ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் தொடங்கியது தமிழ் சின்னத்திரையின் பெரிய பட்ஜெட் ஷோ பிக்பாஸ் 7. மக்களுக்கு…

1 கப் கோதுமை ரவை இருந்தா போதும்.. அருமையான ருசியில் பஞ்சு போல இட்லி சுடலாம்…

Posted by - டிசம்பர் 28, 2023 0
காலையில் எழுந்ததும் என்ன சமைப்பது என்று தெரியலையா? இட்லி சுடலாம் என்றால் இட்லி மாவு இல்லையா? அப்படியானால் கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் கோதுமை ரவை உள்ளதா?…

மாத கடைசியில் பணம் தேவையா? இதை செய்தால் போதும்.. அக்கவுண்டில் பணம் இல்லை என்றாலும் பணம் எடுக்க முடியும்

Posted by - டிசம்பர் 9, 2022 0
நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ள ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் உங்களால் பணம் பெற முடியும். உங்களது சம்பளத்திலிருந்து 2-3 மடங்கு…

TRPயில் டாப்பில் வந்த சன் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறது- சோகத்தில் ரசிகர்கள்

Posted by - ஆகஸ்ட் 9, 2023 0
சன் டிவி சன் தொலைக்காட்சியில் கயல், வானத்தை போல, சுந்தரி, எதிர்நீச்சல், இனியா என தரமான பெண்களை மையப்படுத்திய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல்களுக்கு…

உடல் எடையை குறைக்கும் கொள்ளு அடை

Posted by - ஏப்ரல் 5, 2023 0
கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. கொள்ளுவை ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். தேவையான பொருட்கள்: கொள்ளு – 1…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன