vijay.ng

’உணர்வுப்பூர்வமான பிரச்னை’ மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் விஜய்..!

83 0

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணைக் கட்ட தொடர்ந்து தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், அந்த மாநில அரசின் திட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை கொண்டுவந்தார் முதல்வர் விஜய்.

தீர்மானத்தில் இருப்பது என்ன?

முதல்வர் விஜய் முன்மொழிந்த தீர்மானத்தில் ”காவிரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் உணர்வுபூர்வமான பிரச்னை – முதல்வர் விஜய்

காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும், காவிரிப்படுகை ஒரு பற்றாக்குறை படுகை எனக் குறிப்பிட்டு, படுகையின் மொத்த நீரினையும் படுகை மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டதால், காவிரிப்படுகையில் புதிய திட்டங்களை மேற்கொள்ளவோ, கூடுதலாக நீரை பயன்படுத்தவோ இயலாது. காவிரிப் பிரச்சினை தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் உணர்வுபூர்வமான பிரச்சினையாகும். ஆதலால், கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப்படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, பிற படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என்று மத்திய நீர்வள குழுமத்தையும் இப்பேரவை வலியுறுத்துகிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது” என அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

Related Post

adb75d42 d8e0 41c7 9476 f9058e8f3e96 1

“ஆபாச அமைச்சர் ஆதவ் அர்ஜூனா” .! அந்தப்புர பேச்சை சுட்டிக்காட்டி வெளுத்து வாங்கிய திமுக

Posted by - அக்டோபர் 3, 2026 0
தவெக நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் செய்யும் ஆபாச பாலியல் கொடூரங்களை தடுக்க வழி தேடாமல், எங்களைக் கேலி செய்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள்  என்று நாடகமாடுவதை முதலில் நிறுத்துங்கள்…
Generated Image January 07 2026 5 03PM 1

ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?

Posted by - ஜனவரி 7, 2026 0
அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு…
dLDow

Dhanush:அரசியலில் நுழைவதற்கு தனுஷின் அடுத்த ஸ்டெப்.. என்ன செய்கிறார் பாருங்க

Posted by - அக்டோபர் 21, 2026 0
நடிகர் விஜய் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு மேலும் பல நடிகர்கள் அரசியலில் நுழைவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். தனுஷ், விஷால் தொடங்கி பல…

விஜய் கட்சியில் அதிரடி: தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாற்றம்..!

Posted by - பிப்ரவரி 10, 2024 0
TVK Vijay | நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்ததற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அண்மையில், நடிகர் விஜய்…
fb

மே 4ஆம் தேதி வாக்குகள் இப்படித்தான் எண்ணப்படும்.! தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - ஏப்ரல் 27, 2026 0
Tamil Nadu Assembly election vote counting : காலை 8:00 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணும் பணி துவங்கும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், 30…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன